தனியார் பள்ளியில் இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தல்
கோவை; தனியார் பள்ளியில் இருந்த சந்தன மரத்தை, வெட்டி கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தென்காசியை, சேர்ந்தவர் ராம்குமார், 38; கணுவாய் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 19ம் தேதி அதிகாலை 4:15 மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த சந்தன மரத்தை வெட்டி, சரக்கு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.இதை, இரவு பணியில் இருந்த காவலாளி குணசேகரன் பார்த்து சத்தம் போட்டார். காவலாளி சத்தம் கேட்ட மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து, குணசேகரன் ராம்குமாரிடம் கூறினார்.ராம்குமார் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.