உள்ளூர் செய்திகள்

சன்மார்க்க சங்க விழா

அன்னூர்: அன்னூர் அருகே அல்லிகுளத்தில், வள்ளலார் சன்மார்க்க சங்கம் செயல்படுகிறது. இங்கு இன்று, கோவை சன்மார்க்க சங்கங்கள் மற்றும் அன்னூர் வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில், விழா நடைபெறுகிறது.காலை 6:30 மணிக்கு கொடியேற்றுதலும், காலை 9 :30 மணிக்கு சத்திய ஞானதீபம் ஏற்றுதலும் நடக்கிறது. திருவருட்பா வாசிக்கப்படுகிறது. இதையடுத்து, வள்ளலார் குறித்த சொற்பொழிவு நடைபெறுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. பங்கேற்று இறையருள் பெற, சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !