உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்கு முன் சுரைக்காய் அறுவடை பாதிப்பை தவிர்க்க திட்டம்

மழைக்கு முன் சுரைக்காய் அறுவடை பாதிப்பை தவிர்க்க திட்டம்

உடுமலை;பருவமழைக்கு முந்தைய சீசனில், சுரைக்காய் சாகுபடி செய்து வருவாய் ஈட்டும் முறையை உடுமலை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.உடுமலை வட்டாரத்தில், பந்தல் அமைத்து, புடலை, பாகற்காய், சுரைக்காய் உள்ளிட்ட சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.இதில், விளைநிலங்களில், நிரந்தர பந்தல் அமைக்காத விவசாயிகள், தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய சீசனில் சுரைக்காய் சாகுபடி செய்கின்றனர்.தண்ணீர் தேவை குறைவாக உள்ளதால், கோடை காலத்திலும், விளைச்சல் பாதிப்பதில்லை. ஏக்கருக்கு, 3 கிலோ விதைகளை நடவு செய்து, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.தற்போது, பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், இவ்வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளதால், சுரைக்காய்களுக்கு உள்ளூர் சந்தைகளிலும், பிற மாவட்டங்களிலும் விற்பனை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது: கிணறு மற்றும் போர்வெல்களில், நீர்மட்டம் குறைந்துள்ளதால், சுரைக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். பந்தல் அமைக்காமல், சுரைக்காய் சாகுபடி செய்தால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால், காய்களின் தரம் பாதிக்கும். தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை.எனவே, சுரைக்காயை பாதிப்பு இல்லாமல் அறுவடை செய்ய முடியும். தற்போது, உழவர் சந்தைகளில், கிலோ 20-25 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. எனவே அறுவடை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ