உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செல்வ மாரியம்மன் கோவில் திருவிழா

செல்வ மாரியம்மன் கோவில் திருவிழா

பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையத்தில் செல்வ மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதல் விழா தொடங்கியது. தொடர்ந்து முனி முடுக்குதல், கணபதி ஹோமம், சக்தி அழைத்தல், கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அம்மன் அழைத்தல், செல்வமாரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.விழாவின், சிறப்பு நிகழ்வாக புதன்கிழமை கரகம் அழைத்தல், முளைப்பாரி எடுத்தல், அக்னி கரகம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை