உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனிதவள மேம்பாடு குறித்த கருத்தரங்கு

மனிதவள மேம்பாடு குறித்த கருத்தரங்கு

கோவை; மனித வள மேம்பாட்டுத்துறையின், அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, கோவை ரெசிடென்சி ஓட்டலில், கோவை இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்தது. கருத்தரங்கை, நெக்ஸ் அப் பார்ட்னர்ஸ் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி ஆனந்த் வெங்கட்ராமன் துவக்கி வைத்து பேசுகையில், ''மனிதவள மேம்பாட்டுத்துறை அடுத்து வரும் ஆண்டுகளில், நல்ல வளர்ச்சியை பெற்றிருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தால், மனிதவள மேம்பாடும் திறன் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் மனித வள மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, இந்திய தொழில்கூட்டமைப்பு கோவை துணை தலைவர் மற்றும் சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன நிர்வாகி ராஜேஷ் துரைசாமி, அவலான் கன்சல்டிங் நிறுவன துணை தலைவர் ராமகிருஷ்ணன் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ