உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலியல் தொந்தரவு; முதியவர் கைது

பாலியல் தொந்தரவு; முதியவர் கைது

அன்னுார்: சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது செய்யப்பட்டார். அன்னுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், கோவையில் தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். கடந்த வாரம் ரோட்டில் நடந்து செல்லும்போது அந்த சிறுவனுக்கு, நல்லி செட்டிபாளையத்தை சேர்ந்த முதியவர் பத்மநாதன், 60, என்பவர் பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.இதுகுறித்து, 'சைல்ட்லைன்' அமைப்பின் மேற்பார்வையாளர் சூரியமணி, அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா, வழக்கு பதிவு செய்து, பத்மநாதனை கைது செய்து, போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி