சாலையோரங்களில் நிழல் தரும் மரங்கள்
வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். கொண்டை ஊசி வளைவுகளில், அரிய வகை வன விலங்குகளின் படத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வைத்துள்ளனர்.இந்நிலையில், ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வேம்பு, நாவல், நீர் மருது உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யும் பணி நடக்கிறது.இத்தகவலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர் தெரிவித்தனர்.