மேலும் செய்திகள்
பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சுற்றிய நபர் கைது
13-Feb-2025
கோவை: செல்வபுரம் பகுதியில் குட்கா விற்பனை செய்து வந்த நபர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்கு சீல் வைத்தனர்.செல்வபுரம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது, கடையில் 1.200 கிராம் குட்கா பொருட்கள் இருந்துள்ளன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, விற்பனை செய்த சுராபீ என்பவர் மீது, வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர்.
13-Feb-2025