உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாதனை படைக்கும் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி

சாதனை படைக்கும் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி

கோவை;டி.வி.எஸ்., நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.இப்பள்ளி மாணவி லக் ஷணா 600க்கு 594 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் இடம் பெற்றுள்ளார். மாணவிகள் நிஷாலினி 589, ஹர்சினி 586, பவ்யா 581 மதிப்பெண்களை பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.கணினி அறிவியலில் மூன்று பேரும், கணினிப் பயன்பாடுகளில் ஒன்பது பேரும், கணக்கு பதிவியலில் மூன்று பேரும், வணிகவியலில் மற்றும் பொருளாதாரத்தில் ஏழு பேரும், கணக்கு பாடத்தில் இருவர் மற்றும் உயிரியலில் ஒருவரும் நுாறு சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வில், முத்து நிஷாந் 492 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவர்களை, தாளாளர் மற்றும் முதல்வர் பானுமதி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ