உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமுகை மகா சக்தி மாரியம்மன் திருவிழா

சிறுமுகை மகா சக்தி மாரியம்மன் திருவிழா

மேட்டுப்பாளையம்;சிறுமுகையில், சக்தி விநாயகர் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 24ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கியது. 29ம் தேதி பவானி ஆற்றில் ராமர் கோவில் படித்துறையில் இருந்து, தீர்த்தங்கள் எடுத்து வந்து, விநாயகர், அம்மன், பாலமுருகன் மற்றும் நவகிரகங்களுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. 30ம் தேதி மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பவானி ஆற்றிலிருந்து கோவிலுக்கு கம்பம் எடுத்து வரப்பட்டது. இரவு பூச்சாட்டும், அதைத் தொடர்ந்து கம்பமும் நடப்பட்டது. விழாவை முன்னிட்டு, வரும் 7ம் தேதி வரை, தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்க உள்ளது. அன்று இரவு அம்மன் அழைப்பும், பவானி ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதலும் நடக்க உள்ளது. எட்டாம் தேதி காலை பவானி ஆற்றில், ராமர் கோவில் படித்துறையில் இருந்து, அம்மன் சக்தி கலசங்களும், படைக்களமும் அழைத்து வரப்படுகிறது. காலை, 8 மணிக்கு கல்யாண சீர்வரிசை அழைப்பும், தொடர்ந்து, 10:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. அன்று மதியம் மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. ஒன்பதாம் தேதி மஞ்சள் நீராட்டும், மறுபூஜையும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ