| ADDED : மே 08, 2024 12:33 AM
கோவை:சிறுதுளி சார்பில், கோவை வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் உள்ள குட்டைகளில் உள்ள கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிறுதுளி சார்பில் ஆலோசனை கூட்டம் நொய்யல் மையத்தில் நடந்தது.இதில் பங்கேற்ற சிறுதுளி உயர் மட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணசுவாமி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பற்றியும் மற்றும் அதன் நோக்கத்தையும் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார்.சிறுதுளியின் உறுப்பினர் நித்திலேஷ், சுத்திகரிப்பு நிலையத்தின் வடிவமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிலையாக பராமரிக்க பங்குதாரர்களின் பங்கேற்பின் நோக்கம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.