உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்த சிறுவாணி அணை நீர் மட்டம்

ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்த சிறுவாணி அணை நீர் மட்டம்

கோவை;கனமழை எதிரொலியாக ஒரே நாளில், சிறுவாணி நீர்மட்டம், நான்கு அடி உயர்ந்தது.தென்மேற்கு பருவமழை கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான, சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கனமழை பெய்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சிறுவாணி அடிவாரத்தில், 95 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 135 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில், நான்கு அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம், 35.35 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 6.343 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் நேற்று

பதிவான மழை அளவுபீளமேடு விமான நிலையம், 11.20 மி.மீ., வேளாண் பல்கலை - 1.80, பெரியநாயக்கன்பாளையம் , 33.50, பில்லுார் அணை, 8, கோவை தெற்கு தாலுகா, 2.50, சூலுார், 11, வாரப்பட்டி, 15, தொண்டாமுத்துார், 5, மதுக்கரை தாலுகா, 5, போத்தனுார், 3 மி.மீ., பொள்ளாச்சி, 66, மாக்கினாம்பட்டி, 88.30, கிணத்துக்கடவு, 13, ஆனைமலை, 39, ஆழியார், 49, சின்கோனா, 170, சின்னக்கல்லார், 232, வால்பாறை பி.ஏ.பி., 169, வால்பாறை தாலுகா, 164, சோலையாறு, 140 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்