உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் குறைதீர் முகாமில் 77 மனுக்களுக்கு சுமுக தீர்வு

மக்கள் குறைதீர் முகாமில் 77 மனுக்களுக்கு சுமுக தீர்வு

கோவை : மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், 77 மனுக்களுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில், மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில், விசாரணை நடத்தப்பட்டது.குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான, 93 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டதில், ஐந்து மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 77 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 11 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும், தீர்வு காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை