உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலை உறுதியளிப்பு திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

வேலை உறுதியளிப்பு திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவுக்கு உட்பட்ட கோதவாடி ஊராட்சியில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று (6ம் தேதி) நடந்தது.இதில், கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, தணிக்கையாளர் கவுஸ்கான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டம் விவசாயி ராமசாமி தலைமையில் நடந்தது.கூட்டத்தில், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் அதிக அளவு உள்ளனர். ஆனால் ஆட்களுக்கு தகுந்த வேலைகள் இல்லை. மேலும், சிலருக்கு வங்கி கணக்கு வாயிலாக வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் தெரிவதில்லை.ஆற்றுப்பகுதி ஓரம் செடிகள் மற்றும் மரங்கள் வளர்த்தல், 'சங்கன்பாண்டு' போன்ற திட்டங்கள் மற்றும் ஊராட்சி எல்லை விரிவு படுத்தினால் பயனாளிகள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என மக்கள் தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், அனைவருக்கும் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை