உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

சூலுார்:கண்ணம்பாளையம் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூன் 2ம் தேதி நடக்கிறது.சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன், காமாட்சியம்மன் மற்றும் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவில் பழமையானவை. இங்கு, திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, நேற்று மாலை, 5:30 மணிக்கு, முளைப்பாலிகை ஊர்வலத்துடன் துவங்கியது.தொடர்ந்து விநாயகர் பூஜை, திருவிளக்கு பூஜை, நிலத்தேவர் பூஜை நடந்தது. மகா தீபாராதனை, திவ்ய பிரபந்த விண்ணப்பம், தாசர்கள் கவுரவிப்பு உள்ளிட்டவைகள் நடந்தன. தொடர்ந்து பரத நாட்டியம் நடந்தது.இன்று மாலை, 5:30 மணிக்கு, முதல் கால ஹோமம் துவங்குகிறது. நாளை இரண்டு கால ஹோமம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், சொற்பொழிவு நடக்கிறது. ஜுன் 2ம்தேதி காலை, நான்காம் கால ஹோமம் முடிந்து, 8:00 மணிக்கு, மாகாளியம்மன், காமாட்சியம்மனுக்கும், 9:00 மணிக்கு, வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர் மற்றும் மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி