உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்., குளம் குறுமைய டெனிகாய்ட் போட்டி

எஸ்.எஸ்., குளம் குறுமைய டெனிகாய்ட் போட்டி

கோவை : எஸ்.எஸ்., குளம் குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான டெனிகாய்ட் போட்டியில் மாணவியர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பள்ளிக்கல்வித்துறையின் குறுமைய அளவிலான போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.எஸ்., குளம் குறுமையத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ரூபி மெட்ரிக்., பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது.இதன், மாணவியர் பிரிவு டெனிகாய்ட், மாணவர் பிரிவு கேரம் போட்டிகள் நேற்று ரூபி மெட்ரிக்., பள்ளியில் நடத்தப்பட்டன. போட்டியை ரூபி பள்ளி தாளாளர் சுகுமார், முதல்வர் கற்பக ஜோதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.மாணவியர் 14 வயது இரட்டையர் பிரிவில் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கீர்த்தி ஸ்ரீ, பிரீனா முதலிடமும், சுதந்திரா மேல்நிலைப்பள்ளி சியாம்லாஸ்ரீ, அக்சிதா இரண்டாம் இடம் பிடித்தனர்.19 வயது இரட்டையர் பிரிவில் கே.ஜி., பெண்கள் பள்ளி ரேகா, சத்யா முதலிடம், காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி டெல்சியா சன் ராஜா, பிரியங்கா இரண்டாமிடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ