உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்கத்துடன் ஊழியர் மாயம்

தங்கத்துடன் ஊழியர் மாயம்

கோவை;ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ஒரு நகைக்கடையில், சுண்டக்காமுத்துாரை சேர்ந்த லோகேஷ் ராஜ்சுராஸ், 40, என்பவர் நகை பட்டறை பிரிவில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரிடம் நகை செய்ய, 84 கிராம் தங்க கட்டி கொடுக்கப்பட்டது. அதன் பின், லோகேஷ் ராஜ்சுராஸ் பணிக்கு வராமல் இருந்துள்ளார். லோகேஷ் ராஜ்சுராசின் டேபிள் டிராயரை மேலாளர் மோகன் குமார் சோதனை செய்தார். அதில், 24 கிராம் தங்கம் மட்டுமே இருந்துள்ளது. மீதமுள்ள 60 கிராம் தங்கம் காணாமல் போயிருந்தது. லோகேஷ் ராஜ்சுராசை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.மோகன்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்கத்துடன் தலைமறைவான லோகேஷ் ராஜ்சுரஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை