உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான சதுரங்க போட்டி

மாநில அளவிலான சதுரங்க போட்டி

- நமது நிருபர் -திருப்பூரில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில், 451 பேர் கலந்து கொண்டனர்.மாநில செஸ் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட சதுரங்க கழகம், கிங்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி, முத்தணம்பாளையம், ஆக்ஸ்போர்டு மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.இதில், ஒன்பது, 12, 15 வயது பிரிவில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. மாநிலம் முழுதும், 19 மாவட்டங்களில் இருந்து, 451 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொதுபிரிவினருக்கான போட்டியில் ஆர்வமுடன், 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். இறுதிச்சுற்றில், மொத்தம் மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, 120 பதக்கம், 25 ஆயிரம் மதிப்புள்ள பரிசுத்தொகை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி