உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி; கோவை மாணவருக்கு எட்டு பதக்கம்

மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி; கோவை மாணவருக்கு எட்டு பதக்கம்

கோவை : மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கோவை பள்ளி மாணவர் எட்டு பதக்கம் வென்றார்.கோவை ரைபிள் சங்கம் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, போலீசார் பயிற்சி மையத்தில் உள்ள கோவை ரைபிள் சங்கத்தில் நடந்தது. ரைபிள், பிஸ்டல் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. யூத், சப் - யூத், ஜூனியர், சீனியர், சீனியர் மாஸ்டர் என பல்வேறு பிரிவுகளில் தனிநபர் மற்றும் அணி போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற புனித மிக்கேல் பள்ளி மாணவர் இம்மானுவேல் ரைபிள் தனிநபர் பிரிவில் நான்கு தங்கம், அணி பிரிவில் இரண்டு தங்கம், இரண்டு வெண்கலம் என எட்டு பதக்கங்கள் வென்றார். வெற்றி பெற்ற மாணவரை புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆரோக்கிய சாமி, தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் சகாயராஜ் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை