உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து: தேவைக்கேற்ப இருப்பு வைப்பு

டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்து: தேவைக்கேற்ப இருப்பு வைப்பு

பொள்ளாச்சி:தென்மேற்கு பருவழை சீசன் துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான காய்ச்சல் தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காய்ச்சல் தடுப்பு மருந்துகள் தருவிக்கப்பட்டு வருகின்றன.பொதுசுகாதாரத்துறையினர் கூறியதாவது:டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள் குளிர், மழை காலத்தில் அதிகமாக உற்பத்தியாகும். இக்காலகட்டத்தில் டெங்கு பரவலால் பலர் பாதிப்பர்.எனவே, முன்னெச்சரிக்கையாக, மாவட்டந்தோறும், 'ஓசல்டாமிவிர்' மாத்திரை, தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டி.பி.டி., தடுப்பூசிகள், ஓ.ஆர்.எஸ்., உப்பு - சர்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான 'அசித்ரோமைசின்' மாத்திரைகள் தருவிக்கப்படுகின்றன.அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேவையான மருந்துகளை இருப்பு வைக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ