உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி பஸ் மோதி மாணவி பலி

பள்ளி பஸ் மோதி மாணவி பலி

பாலக்காடு : பாலக்காடு அருகே, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி, பள்ளி பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு நாரங்காப்பற்றை பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத், உம்முஹபீபா தம்பதியர் மகள் ஹிபா, 6. நெல்லிப்புழையில் உள்ள, தாருல் நஜாத் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் இவர், தினமும் பள்ளி பஸ்சில் சென்று வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை பள்ளி பஸ்சில் இருந்து இறங்கிய ஹிபா, வீட்டிற்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது, முன்னோக்கி சென்ற அதே பஸ் மோதியது. இதில், பெற்றோர் கண் முன், சம்பவம் இடத்திலேயே ஹிபா உயிரிழந்தார்.பஸ்சில் இருந்து இறங்கிய மாணவி, பஸ் முன்பாக சாலையை கடப்பதை கூட பார்க்காமல், கவனக்குறைவாக டிரைவர் செயல்பட்டு பஸ்சை நகர்த்தியுள்ளார். சம்பவம் குறித்து, மண்ணார்க்காடு போலீசார், மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த பள்ளி பஸ் டிரைவர் அலிஅக்பர், 42, மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி