உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்.குளம் குறுமைய கோ-கோ டி.கே.எஸ்., பள்ளி மாணவர்கள் டாப்

எஸ்.எஸ்.குளம் குறுமைய கோ-கோ டி.கே.எஸ்., பள்ளி மாணவர்கள் டாப்

கோவை : கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, எஸ்.எஸ்.குளம் குறுமைய அளவிலான கோ-கோ போட்டியில், டி.கே.எஸ்., பள்ளி மாணவர்கள் அபாரமாக விளையாடினர். பள்ளிக்கல்வித்துறையின் எஸ்.எஸ். குளம் குறுமைய அளவிலான போட்டிகள், ரூபி மெட்ரிக்., பள்ளி சார்பில் கே.ஜி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. போட்டியை, கே.ஜி., இன்ஜி., கல்லுாரி முதல்வர் சுரேஷ் மற்றும் கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ரத்தினமாலா ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவ - மாணவியருக்கான கால்பந்து, த்ரோபால், கோ கோ, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் பிரிவு

கோ கோ: 14 வயது பிரிவில், டி.கே.எஸ்.பள்ளி முதலிடம், சுவாமி விவேகானந்தா பள்ளி இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் டி.கே.எஸ்.பள்ளி முதலிடம், வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. த்ரோபால் : 14 வயது பிரிவில் விமல் ஜோதி முதலிடம், சரவணம்பட்டி அரசு பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் விமல் ஜோதி முதலிடம், ரூபி மெட்ரிக்., இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் விமல் ஜோதி முதலிடம், வி.சி.எஸ்.எம்., பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. கூடைப்பந்து : 14 வயது பிரிவில் ஏ.ஏ.எம்.ஜி., அரசு பள்ளி முதலிடம், ஆதித்யா பள்ளி இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் ஆதித்யா பள்ளி முதலிடம், ராமகிருஷ்ணா இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் ஏ.ஏ.எம்.ஜி., பள்ளி முதலிடம், சுதந்திரா பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.

மாணவியர் பிரிவு

கூடைப்பந்து: 14 வயது பிரிவில் ஏ.ஏ.எம்.ஜி., முதலிடம், சுதந்திரா இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் ஆதித்யா முதலிடம், ஏ.ஏ.எம்.ஜி., இரண்டாமிடம் பிடித்தன. கோ கோ 17 வயது பிரிவில் டி.கே.எஸ்., பள்ளி முதலிடம், எஸ்.எஸ். குளம் அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை