குறுமைய போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மாணவர்கள்
- நிருபர் குழு -பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் திறமை வெளிப்படுத்தி அசத்தினர்.பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், கிழககு குறுமைய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. போட்டிகளை சிறுகளந்தை விக்னேஸ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைத்து நடத்துகிறது.கோ-கோ, கால்பந்து, த்ரோபால், ஹேண்ட் பால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டிகளில் மாணவர்கள் தங்களது பள்ளி வெற்றி பெற முழு திறமையை வெளிப்படுத்தி விறுவிறுப்பாக விளையாடுகின்றனர். மாணவியர் பிரிவு
கோ-கோ போட்டியில், 14,17,19 வயது பிரிவுகளில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. 17 மற்றும், 19 வயது பிரிவில் வதம்பச்சேரி எஸ்.சி.எம்., பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 14 வயது பிரிவில், காளியண்ணன்புதுார் அரசுபள்ளி இரண்டாமிடம் பெற்றது.த்ரோ பால் போட்டியில், 14வயது பிரிவில் சுல்தான்பேட்டை வெங்கட்ராஜ் மெட்ரிக் பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி குட் ெஷப்பர்டு பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.17 வயது பிரிவில், விஸ்வதீப்தி பள்ளி முதலிடமும், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 19 வயது பிரிவில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி ஏ.எம்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.கால்பந்து போட்டியில், 14, 17,19 வயது பிரிவில் வடசித்துார் அரசுப்பள்ளி முதலிடம் பெற்றது. 14, 17 வயது பிரிவுகளில், பொள்ளாச்சி ஆதித்யா வித்யா மந்திர் பள்ளி இரண்டாமிடமும்; 19 வயது பிரிவில், பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.ஹாக்கி போட்டியில், 14,17, 19 வயது பிரிவுகளில், காளியண்ணன்புதுார் அரசு பள்ளி முதலிடமும், தொண்டாமுத்துார் ஆதிதிராவிட நலப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. உடுமலை
குடிமங்கலம் வட்டார அளவிலான செஸ் போட்டி, உடுமலை-பொள்ளாச்சி ரோட்டிலுள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கில் நடந்தது. செஸ் போட்டி சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர்-சீனியர் என நான்கு பிரிவுகளில் நடந்தது.மாணவர்களுக்கான சப்-ஜூனியர் பிரிவில், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி முதலிடமும், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றது.ஜூனியர் பிரிவில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம், என்.வி., மெட்ரிக் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.சீனியர் பிரிவில் குடிமங்கலம், கொங்கல் நகரம், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளிகள் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றன. சூப்பர்சீனியர் பிரிவில் பெதப்பம்பட்டி, பூளவாடி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றன.மாணவியருக்கான சப்-ஜூனியர் பிரிவில், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். ஜூனியர் பிரிவில் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடமும், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றன.சீனியர் பிரிவில் பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றன.சூப்பர்-சீனியர் பிரிவில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மற்றும் மூன்றாமிடத்தில் வெற்றி பெற்றது. குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது. த்ரோ பால்
உடுமலை அளவிலான, மாணவியருக்கான குறுமையம் த்ரோபால் போட்டிகள், வித்யாசாகர் கல்லுாரியில் நடந்தது. ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் உடுமலை விசாலாட்சி பெண்கள் பள்ளி மாணவியர் முதலிடம் பெற்றனர்.சூப்பர்-சீனியர் பிரிவில் கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்தனர். ஜூனியர் பிரிவில் கணியூர் பாரதிய வித்யா மந்திர் பள்ளியும், சீனியர் பிரிவில் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், சூப்பர்-சீனியர் பிரிவில் ஆர்.கே.ஆர்., ஞானோதயா பள்ளியும் இரண்டாமிடம் பெற்றன.முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.