உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேஷன் ஷோவில் அசத்திய பெண்கள்

பேஷன் ஷோவில் அசத்திய பெண்கள்

கோவை; சரவணம்பட்டி புரோசோன் மாலில் கடந்த 7ம் தேதி துவங்கிய, சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதனொரு பகுதியாக, ஆடை அலங்கார அணிவகுப்பு எனும் பேஷன் போட்டி நடந்தது.பேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், ஐந்து வயது குழந்தைகள் முதல் இளம்பெண்கள், பெரியவர்கள் ஏராளமானோர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 120க்கும் மேற்பட்ட டிசைனர்கள், 40க்கும் மேற்பட்ட அலங்கார நிபுணர்களும் கலந்து கொண்டனர். 130க்கும் மேற்பட்ட ஆடை அலங்காரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 40 வகையான போட்டி நடத்தப்பட்டது.முன்னணி நடன இயக்குனர்கள் பங்கு பெற்றனர். ஏராளமான பொதுமக்கள் பேஷன் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். பேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் இயக்குனர் சுகுணா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ