உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு அலுவலக வளாகத்தில் குப்பை குவிப்பதால் அவதி

அரசு அலுவலக வளாகத்தில் குப்பை குவிப்பதால் அவதி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில் குப்பை குவிந்து கிடப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாசில்தார், வேளாண், சமூக நலத்துறை, ஒன்றிய அலுவலகம் மற்றும் மகளிர் சுய உதவி குழு அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்கு, தினமும் அதிகப்படியான மக்கள், பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில், வேளாண் அலுவலகத்தின் அருகே, அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் குப்பை குவிந்து கிடக்கிறது.இதனால், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மழை பெய்வதால், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அரசு அலுவலக வளாகத்தில் உள்ள குப்பையை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ