உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகுணா இன்ஜி., கல்லுாரியில் தொடர் மராத்தான் போட்டி

சுகுணா இன்ஜி., கல்லுாரியில் தொடர் மராத்தான் போட்டி

கோவை:கோவை காளப்பட்டியில் உள்ள, சுகுணா பொறியியல் கல்லுாரியில் உலக சாதனை நிகழ்வாக, கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற பெயரில், 24 மணி நேரம் இடைவெளி இல்லாத தொடர் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்வில், சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, சுகுணா கல்வி அறக்கட்டளையின் செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயலர்சேகர், பொறியியல் கல்லுாரியின் இயக்குநர்பிரகாசம், சுகுணா பொறியியல் கல்லுாரி முதல்வர் மகுடேஸ்வரன் மற்றும் அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சென்னையின் மேலாண்மை இயக்குனர் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற மாணவர்களுக்கு, உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி