உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வுகளில் சூலுார் அரசு பள்ளிகள் சூப்பர்

பொதுத்தேர்வுகளில் சூலுார் அரசு பள்ளிகள் சூப்பர்

சூலுார்:பிளஸ் 2 மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில், சூலுார் வட்டார அரசு பள்ளிகள் முன்னேற்றப் பாதையில் செல்கின்றன.

10 வகுப்பு :

காங்கயம்பாளையம் அரசு பள்ளி, 98.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சிவசூரியா - 486, புனிதா -483, விஜயா திருப்பதி - 465 மதிப்பெண்கள் பெற்றனர். சூலுார் பெண்கள் மேல்நிலைப்பளளி, 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 38 மாணவிகள், 400 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். சூலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 84 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 13 மாணவர்கள், 400 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றனர். வாகராயம்பாளையம் அரசு பள்ளி,, 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கோபிகா ஸ்ரீ 480 மதிப்பெண்களும், மனோஜ், 475 , லோகேஸ்வரி -466 மதிப்பெண்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

பிளஸ் 2 :

பிளஸ் 2 பொது தேர்வில், சூலுார் வட்டார அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அரசூர் மேல்நிலைப்பள்ளியில், தேர்வு எழுதிய, 115 பேரில், 113 பேர் தேர்ச்சி பெற்றனர். 98.2 சதவீதம் தேர்ச்சி சதவீதம் ஆகும். சிவ தர்ஷனி- 559, சைபால் - 557, யோகிதா - 551 மதிப்பெண்கள் பெற்றனர்.சூலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய, 94 பேரில், 90 பேர் தேர்ச்சி பெற்றுளளது. தேர்ச்சி சதவீதம், 96 ஆகும். திவித் - 542, தினேஷ் - 533, கவுரி சங்கர் - 526, மதிப்பெண்கள் பெற்றனர். காங்கயம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 97. 78 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சுஜிதா - 528, சாருலதா - 519, அஞ்சனா - 507 மதிப்பெண்கள் பெற்றனர். வாகராயம்பாளையம் மேல்நிலைப்பள்ளி, 136 பேர் தேர்ச்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ