உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஹேண்ட்பால் இலவசமாக கற்றுத் தரும் கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.நிறைவு விழாவுக்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் தலைமை வகித்தார். பயிற்சி முகாம் மே ஐந்தாம் தேதி தொடங்கி, ஜூன் ஒன்று வரை தொடர்ந்து நடந்தது. நிறைவு விழாவில், கோவை மாவட்ட கைப்பந்து கழகத்தின் தலைவர் சந்தோஷ் குமார் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், சிலம்பம் பயிற்றுனர் மதுசுதன், ஹேண்ட்பால் பயிற்றுனர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ