உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கல்

சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கல்

ஆனைமலை;''ஆனைமலை வட்டாரத்தில், சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது,'' என, வேளாண்துறை உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.ஆனைமலை வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் கூறியதாவது:ஆனைமலை வட்டாரத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம், நிலக்கடலை போன்ற மானாவாரி பயிர்கள் அறுவடை நிலையில் உள்ளது. அறுவடைக்கு பின்னர் உழவுப்பணி மேற்கொண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் பெய்யும் மழையை பயன்படுத்தி நிலக்கடலை, எள் போன்ற, 90 முதல், 110 நாட்களில் அறுவடைக்கு வரும், டிஎம்வி 7, விஆர்ஐ4 (எள்), கதிரி லபாக்சி, ஜிஜேஜி 32, (நிலக்கடலை) ரகங்கள் பயிரிட வேளாண்துறை பரிந்துரை செய்கிறது.சான்று பெற்ற விதைகள் எள், 160 கிலோ, நிலக்கடலை, 3,190 கிலோ, சோளம், 864 கிலோ கோட்டூர் மற்றும் ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்பயிர்கள் சாகுபடி செய்ய விரும்பும் ஆனைமலை வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் பெற்று பயிர் செய்து பயனடையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை