உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு கணக்கெடுப்பு

விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு கணக்கெடுப்பு

தொண்டாமுத்துார்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், இலவச மின் இணைப்பு பெற்று, விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.தமிழக அரசு சார்பில், விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் 23.56 லட்சம் விவசாயம் மின் இணைப்புகள் உள்ளன. இலவச விவசாய மின் இணைப்பிற்கு, வேளாண்மை துறை, ஆண்டுக்கு, 7,280 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. இந்நிலையில், இலவச விவசாய மின் இணைப்பு பெற்று, விவசாயம் இல்லாத வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.இலவச விவசாயம் மின் இணைப்பு பெற்று, விவசாயம் செய்யாத மின் இணைப்புகள் குறித்து கணக்கெடுக்க, வேளாண்மை துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டார்.இதனையடுத்து, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வேளாண்மைதுறையினர் மற்றும் தோட்டக்கலை துறையினர், இலவச மின் இணைப்பு பெற்ற விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று, விவசாய பயன்பாடு உள்ளதா அல்லது நீண்ட காலமாக மின் இணைப்பு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதா என்பது குறித்து கள ஆய்வு செய்து கணக்கெடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை