உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டேக்வாண்டோ போட்டி 14ம் தேதி நடக்கிறது

டேக்வாண்டோ போட்டி 14ம் தேதி நடக்கிறது

கோவை;மாவட்ட அளவிலா ஜூனியர் பிரிவு டேக்வாண்டோ போட்டி வரும், 14ம் தேதி மாரண்ண கவுடர் பள்ளியில் நடக்கிறது.கோவை மாவட்ட ஸ்போர்டஸ் டேக்வாண்டோ சங்கம் சார்பில் 15வது மாவட்ட கேடட் மற்றும் ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டியின் கேடட் பிரிவில் 14 -16 வயதுடையோரும், ஜூனியர் பிரிவில் 16- 17 வயதுடையோரும் பங்கேற்கலாம். மாவட்ட அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவியர் மாநில அளவிலான போட்டியில் கோவை அணி சார்பில் பங்கேற்பர்.அதிலிருந்து தேர்தெடுக்கப்படுவோர் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர். பங்கேற்க விரும்புவோர் 99946 17222 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ