உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரி  ஆண்டு விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரி  ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை;தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரியின் 40வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். கல்லுாரியின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி தலைவர் ரவி சிறப்புரை ஆற்றினார். கவுரவ விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐதராபாத் எமிரிட்டஸ், பீனிக்ஸ் குரூப்ஸ் தலைவர் சுரேஷ் சுக்கப்பள்ளி பேசுகையில், 'வெற்றிக்கு குறுக்கு வழிகள் கிடையாது. அயராத உழைப்பே வெற்றியைத் தரும். மாணவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்,'' என்றார். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ