மேலும் செய்திகள்
பழுதான கேமராக்கள் மாயம் பராமரிக்க நடவடிக்கை தேவை
01-Mar-2025
பொள்ளாச்சி;மின்வாரியத்தால், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் சுற்றி தற்காலிக கம்பி வேலி அமைத்து,பாதுகாப்பு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் மின்வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுவாக, வீடு, கடைகள், நிறுவனங்களுக்கு, மின்வாரியம் மின்சாரத்தை வினியோகிக்கிறது. இதற்கு டிரான்ஸ்பார்மர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், வீடுகள் மற்றும் வணிகக் கடைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.அதற்கேற்ப, மின்சாரம் சார்ந்த பயன்பாடுகளும், தேவைகளும் அதிகரித்து வருகின்றன. அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது, குறைந்த மின்னழுத்தத்தால் விளக்குகள் எரியாமல் இருப்பது போன்ற பிரச்னை ஏற்படுவதை தடுக்க, ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வாறு, டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ள இடங்களிலேயே, குப்பை கொட்டுவதை பலர் வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். அங்கு இதை கொட்டக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளும் மக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தியும் வருகின்றனர்.இது ஒருபுறமிருக்க, டிரான்ஸ்பார்மர் ஒட்டி வெல்டிங், பழைய பொருட்கள் விற்பனை உள்ளிட்ட தொழில்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். பராமரிப்பு பணிக்காகச்செல்லும் மின்வாரிய ஊழியர்கள் திணறுகின்றனர்.தற்போது, பகலில் கடும் வெயில் நிலவுவதால், ஏதேனும் வகையில் தீ பரவினால், டிரான்ஸ்பார்மர் பாதிப்படையும். மின்விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக கம்பி வேலி அமைத்து, எச்சரிக்கை அறிவிப்பையும் இடம்பெறச் செய்ய வேண்டும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, டிரான்ஸ்பார்மருக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது.
01-Mar-2025