உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாட்டில் குடிநீரை பரிசோதனை செய்யுங்க!

பாட்டில் குடிநீரை பரிசோதனை செய்யுங்க!

பொள்ளாச்சி; கோடை நெருங்கி வரும் நிலையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், தற்போதே குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. சமீபகாலமாக, சுகாதாரமான குடிநீர் வேண்டி மக்கள் பலரும், 20 லிட்டர் கேன்களை, வீடுகளுக்கு தருவிக்கின்றனர்.வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், பெரிய மற்றும் சிறிய அளவிலான கடைகளிலும், ஒரு லிட்டர் கேன், இரண்டு லிட்டர் கேன், 250 லிட்டர் பிளாஸ்டிக் பாக்கெட் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:குடிநீர் பாட்டில்களில், சரியான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்டு, விற்பனை செய்தாலும், அதனை பருகுவோருக்கு சளி, இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்ட கேன்களை பயன்படுத்தாமல் இருப்பதுடன், கேன்கள் அழுக்கின்றி தெளிவாக உள்ளதா என்பதை உணவுப் பாதுகாப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும்.குறிப்பாக, குடிநீர் தயாரிப்பு ஆலைகளில் சரிவர உணவு பாதுகாப்பு சட்டம் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். போலியான, அனுமதி பெறாத நிறுவனங்களின், குடிநீரைக் குடிப்பதால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து சுகாதார அதிகாரிகளும் ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை