உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணற்றில் குதித்து இறந்த வாலிபர் உடல் 5 நாட்களுக்கு பின் மீட்ட முத்து குளிப்பவர்கள்

கிணற்றில் குதித்து இறந்த வாலிபர் உடல் 5 நாட்களுக்கு பின் மீட்ட முத்து குளிப்பவர்கள்

கோவை : கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் உடலை முத்து குளிப்பவர்கள், 5 நாட்களுக்கு பின் மீட்டனர்.கோவை சங்கனுார் நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயராஜ், 40, கார்பெண்டர். இவர் கடந்த, 11ம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடியும் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்து குளிப்பவர்களை அழைத்து வந்து உடலை மீட்க தீயணைப்பு துறையினர் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து துாத்துக்குடியில் இருந்து, 4 பேர் வரவழைக்கப்பட்டு, 5 நாட்களுக்கு பின் உடலை மீட்டனர்.இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் உடல், 24 மணி நேரத்திற்கு பின் மேலே மிதக்க வாய்ப்புகள் உள்ளது.தண்ணீர் அதிகம் இருந்ததால் விஜயராஜின் உடல் கிணற்றின் ஆழத்தில் இருந்து மேலே வர தாமதமாகலாம் என நினைத்து வீரர்கள் தீவிரமாக தேடினர். ஆனால் மூன்று நாட்களாகியும் அவரது உடல் கிடைக்கவில்லை. மேலேயும் வரவில்லை. இதையடுத்து துாத்துக்குடியில் இருந்து முத்து குளிப்பவர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டது. நேற்று, 4 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழக்கப்பட்டு கிணற்றில் இறங்கி தேடினோம். அப்போது விஜயராஜ் உடல் கிணற்றின் அடியில் உள்ள இடுக்கில் சிக்கி இருந்தது தெரிந்தது. கடுமையான போராட்டத்திற்கு பின், 5 வது நாளான நேற்று அவரது உடல் மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ