உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தந்தை தோளில் அமர்ந்து சென்ற சிறுவன் மீது மரம் விழுந்து பலி

தந்தை தோளில் அமர்ந்து சென்ற சிறுவன் மீது மரம் விழுந்து பலி

வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள, ஷேக்கல்முடி எஸ்டேட் தொழிலாளி முத்துக்குமார். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு மகள், மகன் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடி மையத்துக்கு, 4 வயது மகன் முகிலனை தோளில் சுமந்தபடி, கையில் குடையுடன் தந்தை முத்துக்குமார் சாலையில் நடந்து சென்றார்.அப்போது, பலத்த காற்று வீசிய நிலையில், திடீரென்று சாலையோரம் இருந்த மரம் சரிந்து, அவர்கள் மீது விழுந்தது. இதில், தலையில் படுகாயமடைந்த சிறுவன் முகிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இடுப்பில் படுகாயமடைந்த முத்துக்குமார், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷேக்கல்முடி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ