உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடுபாதை அருகே தென்னை மரங்கள் அகற்ற பேச்சுவார்த்தையில் முடிவு

ஓடுபாதை அருகே தென்னை மரங்கள் அகற்ற பேச்சுவார்த்தையில் முடிவு

சூலுார் : விமானபடைத்தள ஓடு பாதை அருகே உள்ள தென்னை மரங்களை அகற்ற நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சூலுார் அடுத்த காடாம்பாடி பகுதியில் விமானப்படைத் தளம் உள்ளது. இதன் சுற்றுப்பகுதியில் விவசாய நிலங்களும், தென்னை மரங்களும் உள்ளன. ஓடுபாதை விரிவாக்கத்துக்காக, நிலம் எடுக்க உள்ள பகுதிகளில், படைத்தளத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள இரண்டு சர்வே எண்களில், 10 தென்னை மரங்கள் உள்ளன. அவற்றை அகற்ற, விமானப்படைத்தள அதிகாரிகள் வருவாய்த்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, தென்னை மரங்களை அகற்றி கொள்ள, வருவாய்த்துறையினர் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்நிலையில், இழப்பீடு தொகையை கொடுத்த பின், மரங்களை அகற்ற, உரிமையாளர்கள் கோரினர். அவர்களுடன் தாசில்தார் தனசேகர், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன் பேச்சு நடத்தினர். அதில், அதிக பட்சமாக ஒரு மரத்துக்கு, 87 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,என, தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து, மரங்களை அகற்ற விவசாயிகள் ஒப்புதல் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை