உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படிக்க ஆசைதான் பஸ் இல்லையே!

படிக்க ஆசைதான் பஸ் இல்லையே!

கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, கல்வீரம்பாளையம் வரை 11டி மற்றும் 11இ, மருதமலை, சிட்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி, துடியலுார், கணுவாய் வழியாக மருதமலை வரை இயக்கப்பட்ட 123 ஏ ஆகிய இரு அரசு டவுன்பஸ்களை, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு போக்குவரத்துக்கழகம் நிறுத்திவிட்டது.இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்பவர்கள், வயோதிகர்கள், வர்த்தகர்கள் என பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இது தவிர பாரதியார் பல்கலை, அரசு சட்டக்கல்லுாரி, அதை சார்ந்த உறுப்பு கல்லுாரிகளில் படிப்போரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.அதனால் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி, நேற்று பள்ளி மாணவ மாணவியர் பெற்றோருடன் வந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி