உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சியின் வளர்ச்சியே இலக்கு! அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

பொள்ளாச்சியின் வளர்ச்சியே இலக்கு! அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

பொள்ளாச்சி:''பொள்ளாச்சியின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன்,'' என, திப்பம்பட்டியில் நடந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் பேசினார்.பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, எம்.எல்.ஏ..,க்கள் நேற்று பிரசாரம் செய்தனர்.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மேலும், நலத்திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,'' என்றார்.எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தி.மு.க.,வை சேர்ந்த எம்.பி., இப்பகுதிக்கு வந்துள்ளாரா; நன்றி சொல்லக்கூட வரவில்லை.தொகுதி பக்கமே அவர் வராததால், மக்கள் கேள்வி எழுப்புவர் என்பதால் அக்கட்சி வேட்பாளரை மாற்றி இறக்கியுள்ளது. எனவே, மக்களுக்கான கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.வேட்பாளர் கார்த்திகேயன் பேசுகையில், ''பொள்ளாச்சியில் வளர்ச்சிக்கான திட்டங்களை முழு அளவில் செயல்படுத்த பாடுபடுவேன். பொள்ளாச்சியின் வளர்ச்சியே எனது இலக்கு.தென்னை விவசாயிகளின் நலன் காத்திட கொப்பரைக்கு விலை உயர்வு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.தென்னை நார் தொழில் உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ