உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நலம் பெற்று வனத்துக்குள் சென்ற யானை; தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறை

நலம் பெற்று வனத்துக்குள் சென்ற யானை; தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறை

கோவை: உடல்நலம் தேறி வனத்துக்குள் சென்ற யானையை, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை வனப்பகுதியில், கடந்த, மே, 30ம் தேதி, உடல் நலம் குன்றிய நிலையில் தரையில் படுத்துக்கிடந்த பெண் யானையுடன், ஒரு குட்டி யானையும் இருந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பெண் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.கடந்த மே 31ம் தேதி, பெண் யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன், யானையை நிற்க வைத்தனர். தொடர்ந்து, யானைக்கு சிகிச்சை அளித்து, உணவும் வழங்கி வந்தனர். இரண்டு நாட்களாக, தாயுடன் இருந்த குட்டி யானை, கடந்த, 1ம் தேதி, தனது அண்ணனான, 10 வயதுடைய யானையுடன், வனப்பகுதிக்குள் சென்றது.வனத்துறையினர் குட்டியை தேடினர். இந்நிலையில், மே 1ம் தேதி இரவு குட்டி யானை மீண்டும் தாயிடம் வந்து இரண்டு மணி நேரம் இருந்து விட்டு, எட்டு யானைகள் அடங்கிய கூட்டத்துடன் இணைந்தது. நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பின், ஐந்தாம் நாள் யானை, வனத்துக்குள் சென்றது. இந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பெண் யானை தனது கூட்டத்தை தேடி, நகர்ந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''இரு ரேஞ்சர்கள் தலைமையிலான குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எட்டு யானைகள் அடங்கிய கூட்டத்துடன் இணைந்த குட்டியும் நல்ல நிலையில் உள்ளது. உடல் நலம் தேறிய பெண் யானை, நல்ல முறையில் உணவை உட்கொண்டு வருகிறது. விரைவில் கூட்டத்துடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ