உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்றார்கள் போலி ஒயர் போலீசுக்கு சென்றது புகார்

விற்றார்கள் போலி ஒயர் போலீசுக்கு சென்றது புகார்

கோவை:மும்பையை தலைமையிடமாக கொண்டு, சென்னையில் செயல்படும் எலக்ட்ரிக்கல் ஒயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் முதுநிலை மேலாளராக பணிபுரிபவர் மணிமாறன்,74. இந்நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களுக்கு, காப்புரிமை தனியே பெறப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவை, அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே கடலைக்கார சந்தில் இரு எலக்ட்ரிக்கல் கடைகள் மற்றும் சோமசுந்தரா மில்ஸ், ஆர்.ஆர். சுவாமி சந்து பகுதிகளில் தலா ஒன்று என நான்கு கடைகளில், காப்புரிமை பெற்ற நிறுவனத்தின் பெயரில், போலி எலக்ட்ரிக்கல் ஒயர்கள் விற்பது தெரிய வந்தது. நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக, மணிமாறன் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை