மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி சார்பில் பூவோடு எடுத்து வழிபாடு
12-Feb-2025
ஆனைமலை,; மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்து கோவில் வரை மூன்றடி பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.உலகநல வேள்விக் குழு, நாட்டுப்புற இசை கலைஞர் முன்னேற்றப் பேரவையின், ஒரு நாள் ஆன்மிக தினம், ஆனைமலையில் தனியார் மகாலில் நடந்தது. மாநில துணைத் தலைவர் நஞ்சப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கட துரைபாலன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் நாராயணசாமி பேசினார்.இதில், அபிராமி அந்தாதி, அம்மன் தாலாட்டு, அகண்ட ராம நாம ஜபம், தேவராட்டம் ஒயில்கும்மி, வள்ளியம்மை கும்மி, கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பஜனை விழா நடந்தது. இசை விழாவை, கவுரக ஆலோசகர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.அவ்வகையில், பெரும்பான்மை ஹிந்து சமுதாயம் நடத்தக் கூடிய விழாக்களுக்கு எவ்வித தடையும் விதிக்கக் கூடாது. பெரிய கோவில் வருமானத்தை சிறிய கோவிலுக்கு செலவிட வேண்டும்.மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்து கோவில் வரை மூன்றடி பாதை அமைக்க வேண்டும். மேலும், ஓய்வு எடுக்கவும் உணவருந்தவும், தங்கும் மடம் நிறுவ வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Feb-2025