உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய கால்பந்து போட்டி மாணவர்கள் அசத்தல்

குறுமைய கால்பந்து போட்டி மாணவர்கள் அசத்தல்

கோவை: பள்ளிக் கல்வித்துறை மதுக்கரை குறுமையங்கள் அளவிலான விளையாட்டு போட்டிகள் திருமலையாம்பாளையம் செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் நடந்தன.நேற்று நடந்த 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகள் கால்பந்து போட்டியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.இதில் மாணவிகள், 14 வயது பிரிவில் அரை இறுதியில் செட்டிப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி 1 - 0 என்ற கோல் கணக்கில், ஜெ.ஜெ., நகர் அரசு உயர் நிலைப்பள்ளியையும், செயின்ட் ஆன்ஸ் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில், பிச்சனுார் அரசு உயர் நிலைப்பள்ளியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.இறுதி போட்டியில் செயின்ட் ஆன்ஸ் பள்ளி 4 - 0 என்ற கோல் கணக்கில் செட்டிப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.14 வயது மாணவர்கள் பிரிவு அரை இறுதியில், ஜெ.ஜெ., நகர் அரசு உயர் நிலைப்பள்ளி 2 -1 என்ற கோல் கணக்கில், செயின்ட் ஆன்ஸ் பள்ளியையும், பி.எம்.ஜி., மெட்ரிக் பள்ளி 1- 0 என்ற கோல் கணக்கில், பிச்சனுார் அரசு உயர் நிலைப்பள்ளியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.17 வயது பிரிவு மாணவிகள் பிரிவு இறுதி போட்டியில், செயின்ட் ஆன்ஸ் பள்ளி 6-0 என்ற கோல் கணக்கில் பிச்சனுார் அரசு உயர் நிலைப்பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.மாணவர்கள் பிரிவில், வெள்ளலுார் என்.எம்.சி., பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் பிச்சனுார் அரசு உயர் நிலைப்பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.மாணவர்கள், 19 வயது பிரிவு இறுதி போட்டியில், செயின்ட் ஆன்ஸ் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில், வெள்ளலுார் என்.எம்.சி பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை