உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம்! ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் முறையீடு

வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம்! ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் முறையீடு

கோவை:கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6,124 வாக்காளர்கள் இருப்பதாக, பட்டியல் வெளியிடப்பட்டது. இம்முறை ஓட்டுப்பதிவு செய்ய சென்ற வாக்காளர்களில் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.இதை கண்டித்தும், ஓட்டுரிமை மறுக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் ஜூன் 4க்குள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், 'பப்ளிக் பார் அண்ணாமலை' என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், 'என் ஓட்டு என் உரிமை' என்ற தலைப்பில், கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.பின், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.அந்த அமைப்பை சேர்ந்த சுதர்சன் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு அன்றே, பலரது ஓட்டுரிமை நீக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வேண்டுமென்றே, திட்டமிட்டு, சதி செய்துள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதியில், ஒரு பூத்தில் மட்டும், 830 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 2026 சட்டசபை தேர்தலிலும் இதுபோன்ற செயல்படக் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் போராட்டம் நடத்துகிறோம்,'' என்றார்.பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் பேசியதாவது:கோவையில் பணம் கொடுத்தாலும், மக்கள் வாங்கினாலும் ஓட்டுப்போட மாட்டர் என தெரிந்து, வாக்காளர்கள் பெயர்களை நீக்கியுள்ளனர். ஒரு லட்சம் ஓட்டுகள் காணோம் என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியது உண்மை. மொத்தம், 2,059 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பூத்தில் இருந்தும், 20 முதல், 50 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், பா.ஜ.,வுக்கு தொடர்ந்து ஓட்டளிக்கக் கூடியவர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டுப்போட அனுமதி தரணும்!

ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து தேர்தல் ஆணையத்தை சேர்ந்த சில அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர். கொத்து கொத்தாக பெயர்களை நீக்கியிருக்கின்றனர். இவர்கள் மீண்டும் ஓட்டுப்போட அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சொல்லின் செல்வன்
ஏப் 26, 2024 22:12

தோற்பதை நியாயப்படுத்த ஒரு சாக்கு கிடைத்துவிட்டது


veeramani hariharan
ஏப் 26, 2024 11:45

குட் Dont leave your democratic rights


Ramaswami V
ஏப் 26, 2024 08:54

பதிவான ஒட்டு பதிவு மாறி மாறி சொன்னதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்றும் நீக்கபட்டவர்கள் பெயர் மீண்டும் ஒட்டு பதிவு முடிந்த பின்னர் சேர்க்க பட்டு உள்ளதா என்றும் இப்படி நீக்கியவர்கள் எதன் அடிப்படியில் நீக்கினார்கள் என்றும் சொல்ல வேண்டும்


தமிழ்
ஏப் 26, 2024 08:01

இதை உண்மையிலேயே வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் செய்திருந்தால் அது நியாயம்.


Mani . V
ஏப் 26, 2024 04:37

நொன்னைகளா, தேர்தலுக்கு முன்பே தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்று பார்க்க துப்பில்லை தேர்தல் முடிந்து போராட்டம் செய்கிறார்களாம்


ram
ஏப் 26, 2024 10:44

ஏன் தேர்தல் ஆணையம் நீக்கும் பொது இவர்களுக்கு தெரிவித்து இருக்கலாமே, அதான் அனைவரின் மொபைல் நம்பர் அவர்களிடம் இருக்குதே மாத மாதம் சம்பளம் கிம்பளம் வாங்குனும் அனால் வேலை மட்டும் ஒழுங்கா செய்வது கிடையாது இதில் நொட்டை பேச்சு, செக் பண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் திருட்டு திமுக கிளை அமைப்பாக மாறிவிட்டது இனிமேல் தேர்தல் வேலைகளுக்கு பணி ஓய்வு பெற்ற ராணுவ நபர்கள் அண்ட் மத்திய அரசும் ஓய்வு பெற்ற நபர்களை ஈடுபடுத்தலாம் இந்த தேர்தலில், வாக்கு சாவடியில் இருந்த தமிழக அரசு பணியாளர்கள் திருட்டு திமுகவுக்கு வேலை செய்தார்கள் இதற்கு ஒரேய வழி வோட்டர் IDai ஆதார் கார்டில் இணைக்கவேண்டும் எப்படி ஆதார் பான் இணைத்தார்களோ


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ