உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் முறையீடு

வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் முறையீடு

கோவை:கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6,124 வாக்காளர்கள் இருப்பதாக, பட்டியல் வெளியிடப்பட்டது. இம்முறை ஓட்டுப்பதிவு செய்ய சென்ற வாக்காளர்களில் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.இதை கண்டித்தும், ஓட்டுரிமை மறுக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் ஜூன் 4க்குள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், 'பப்ளிக் பார் அண்ணாமலை' என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், 'என் ஓட்டு என் உரிமை' என்ற தலைப்பில், கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.பின், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.அந்த அமைப்பை சேர்ந்த சுதர்சன் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு அன்றே, பலரது ஓட்டுரிமை நீக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ''வேண்டுமென்றே, திட்டமிட்டு, சதி செய்துள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதியில், ஒரு பூத்தில் மட்டும், 830 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 2026 சட்டசபை தேர்தலிலும் இதுபோன்ற செயல்படக் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் போராட்டம் நடத்துகிறோம்,'' என்றார்.பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் பேசியதாவது:கோவையில் பணம் கொடுத்தாலும், மக்கள் வாங்கினாலும் ஓட்டுப்போட மாட்டர் என தெரிந்து, வாக்காளர்கள் பெயர்களை நீக்கியுள்ளனர். ஒரு லட்சம் ஓட்டுகள் காணோம் என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியது உண்மை. மொத்தம், 2,059 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பூத்தில் இருந்தும், 20 முதல், 50 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், பா.ஜ.,வுக்கு தொடர்ந்து ஓட்டளிக்கக் கூடியவர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டு போட அனுமதி தரணும்!

ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ''தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து தேர்தல் ஆணையத்தை சேர்ந்த சில அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர். கொத்து கொத்தாக பெயர்களை நீக்கியிருக்கின்றனர். இவர்கள் மீண்டும் ஓட்டுப்போட அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Balamurugan
ஏப் 26, 2024 13:13

சொந்த வீட்டில் இருப்பவர் பல தேர்தல்களில் ஒட்டு போட்டவர் தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று கண்டிப்பாக சோதனை செய்திருக்க மாட்டார் இது எப்படி வாக்காளரின் குற்றமாகும் எப்படி பெயரை நீக்கலாம்? புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் கண்டிப்பாக செக் செய்யவேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை ஏற்கனவே ஒட்டு உள்ளவர் விலாசமும் மாறாதவருக்கு எப்படி பெயரை நீக்கினார்கள்


Rengaraj
ஏப் 26, 2024 12:19

ஒவ்வோர் ஆண்டும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படுகிறது அதை சரிபார்க்க வேண்டியது வாக்காளராகிய நம் அனைவரது கடமை தவறுகள், திருத்தங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அது வெளியிடப்படுகிறது ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜெண்டுகள் கையிலும் அந்த பட்டியல் இருக்கும் வாக்காளர் அவர்களிடம் கேட்டும் தெரிந்துகொள்ளலாம் ஆனால் தேர்தல் அன்று மட்டுமே அதை பார்ப்பவர்களை என்ன செய்வது? விடுபட்டுப்போயிருக்கிறது என்றால் அதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர், ஆகியோர் பொறுப்பு அதே சமயம் அந்த அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது அரசை மட்டுமே குற்றம் சொல்ல கூடாது ஆனால் அலைபேசி மூலமாக வாக்காளர் அடையாள எண், அல்லது தொலைபேசி எண், அல்லது ஆதார் எண் இவற்றில் ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்தால் அவருக்கான வாக்குப்பதிவு மையத்தின் விவரங்கள் மிக எளிதாக பெறுமாறு தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் தற்போதுள்ள தொழில்நுட்பம் போதாது


Velan Iyengaar
ஏப் 26, 2024 10:13

பொய் சொன்னாலும் பொருந்துவது போல சொல்லவேண்டும் வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டபோது தூங்கிக்கொண்டு இருந்துவிட்டு இப்போ போலியாக போராட்டம் பூத் ஏஜென்ட் பணி என்ன?? வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்த்து தங்களுக்கு வாக்கு எழுதுவோர் என்று அறியப்படும் அவர் பெயர் விடுபடாமல் இருக்கா என்று சரி பார்ப்பது பூத் ஏஜென்ட் இருந்தால் தானே இதை எல்லாம் சரி பார்க்கமுடியும்? பூத் ஏஜெண்ட்டே இல்லாத கட்சி இப்போ இப்படி போராட்டம் நடத்துவது கேலிக்குள்ளாகுது வாக்கு பதிவு தினத்தன்று பெயர் நீக்குவது முடியுமா?? அரசியல் அறிவு அறவே இல்லாத அறிவிலி கும்பல்


Dharmavaan
ஏப் 26, 2024 06:57

ஒரு திருடன் ஊழல் பேர்வழி திமுக கைக்கூலி இவனை மாற்றியிருக்க வேண்டும்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி