மேலும் செய்திகள்
ஏர்போர்ட், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
01-Aug-2024
போத்தனுார்;கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தங்கம். நேற்று முன்தினம் என்.பி. இட்டேரி, குர்ரத்துல் லே - அவுட் பகுதியில் ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து, சோதனை செய்ய முயன்றார். அப்போது அவர்கள் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி, சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் உடைந்த பீர் பாட்டில் ஒன்றை காட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இருவரையும் போலீசார் பிடிக்க முற்பட்டபோது, ஒருவர் தப்பியோடினார். மற்றொருவர் சிக்கினார். விசாரணையில், என்.பி. இட்டேரியை சேர்ந்த ஹஸனார், 32, தப்பியோடியது அபிஷேக் என தெரிந்தது. கொலை மிரட்டல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
01-Aug-2024