மேலும் செய்திகள்
இளநீருக்கு தட்டுப்பாடு; விலை ரூ.1 உயர்வு
30-Jan-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 36 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 14,000 ரூபாய். இளநீர் வரத்து மிகவும் குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து இளநீர் சந்தைகளிலும் இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் மட்டும் வியாபாரிகள் சிலர், விலையை மிகவும் குறைத்து கேட்டு வாங்க முயற்சி செய்கின்றனர். எந்த காரணத்தைக் கொண்டும் இளநீர் விலையை குறைத்து விற்க வேண்டாம்.அறுவடையை சில நாட்கள் ஒத்தி வைக்கவும். நல்ல விலை கிடைக்கும். இளநீர் அறுவடையை, 45 முதல் 50 நாட்கள் வரை கழித்து செய்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எடை நல்ல முறையாக கூடும். கூடுதல் விலை கிடைக்கும்.இவ்வாறு, சீனிவாசன் கூறினார்.
30-Jan-2025