உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் டாக்டரை மிரட்டிய வாலிபர் 

அரசு மருத்துவமனையில் டாக்டரை மிரட்டிய வாலிபர் 

கோவை:அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பயிற்சி டாக்டரை, மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கோவை சலிவன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 38; மதுபோதையில் இருந்த இவரை, யாரோ தாக்கி உள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, பயிற்சி டாக்டர் சிகிச்சை அளித்தார். மதுபோதையில் இருந்த செந்தில்குமார், திடீரென பயிற்சி டாக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார். பயிற்சி டாக்டர் அருகில் இருந்த காவலாளி ஜீவாவை அழைத்தார்.அவர், செந்தில்குமாரை சமாதானம் செய்தார். அப்போது செந்தில்குமார், காவலாளியையும் திட்டி, மிரட்டல் விடுத்தார். காவலாளி ஜீவா, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் செந்தில்குமார் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ