உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை பெய்ய வேண்டி கோவில் செயல் அலுவலர் மவுன விரதம்

மழை பெய்ய வேண்டி கோவில் செயல் அலுவலர் மவுன விரதம்

- - நமது நிருபர் -மழை பெய்ய வேண்டுமென, ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணபவன் மவுனவிரதம் இருந்ததை, பக்தர்கள் பாராட்டினர்.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படுகின்றன. நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோவில்களில், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.கோவிலில், செயல் அலுவலராக சரவணபவன் பணியாற்றி வருகிறார். மழை பெய்து விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்து, விஸ்வேஸ்வரர் சன்னதி கொடிமரம் முன் செயல் அலுவலர் மவுனவிரதம் அனுஷ்டித்தார்.மதியம், 12:00 மணிக்கு, கோவில் நடை அடைக்கப்பட்ட பின், கோவில் வளாகத்திலுள்ள செயல் அலுவலர் அலுவலகத்துக்கு சென்று, வழக்கமான பணிகளை தொடர்ந்தார்.மாலை, 6:00 மணிக்கு வழிபாடு நடத்தி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து வணங்கி, 'ஓம் சிவாய நம' என பாராயணம் செய்து மவுனவிரதத்தை நிறைவு செய்தார்.மழை பெய்ய வேண்டி செயல் அலுவலர் ஒருவர் மவுனவிரதம் மேற்கொண்டதை அறிந்த சிவாச்சார்யார்கள் மற்றும் பக்தர்கள் வியந்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ