ரேஸ்கோர்ஸ் பகுதியில் சந்தன மரம் திருட்டு
கோவை : ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து சந்தன மரம் திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் உள்ள ஷேசாச்சலம் என்பவர் வீட்டு அருகில் சந்தன மரம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஷேசாச்சலம் மரம் இருந்ததை பார்த்துள்ளார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, மரம் வெட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் ராஜூவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மரத்தின் கீழ் பகுதியில் இருந்து, சுமார் மூன்று அடிக்கு வெட்டி எடுத்துச்சென்றுள்ளது தெரிந்தது. புகாரையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.